பல்கலை. தொலைதூரக் கல்வி: தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன், முடிவுகள் www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன. மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.1,000 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு தலா ரூ.300 செலுத்த வேண்டும்.

அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories