JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, April 20, 2019

வரலாற்றில் இன்று 20.04.2019

ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.


1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
1859 – சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 – லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 – திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.


1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 – கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 – டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.



பிறப்புகள்

1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வே பிரதமர்
1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி


1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்

இறப்புகள்

1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1850)
1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)