தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன்  எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். 11 மொழிகளில் நீட் தேர்வு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது மற்றும் கலந் தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அமல்படுத்தப்பட்டது. சில தொழில்நுட்ப பிரச்சினையால் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதை கைவிட்டு, ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லை னில் விண்ணப்பங்களை பெற்று ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடத்த சுகாதாரத்துறை அதிகாரி கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிக ளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இன்னும் தமிழக அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை. தமிழக அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் பழையபடி மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும்” என்றனர்.இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் தமிழக அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel