Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 15, 2019

BE - நேரடி மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 20% லிருந்து 10% ஆக குறைப்பு!

பி.இ., பி.டெக். ஆகிய படிப்புகளில், 2 -ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.


Lateral Entry எனப்படும் நேரடி மாணவர் சேர்க்கைக்கு பாலிடெக்னிக் படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்.சி கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், பாலிடெக்னிக் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருந்தன. இதனால், நேரடி மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 20% லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் நேரடி 2 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 10% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அதற்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டால் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நிரப்பப்படாத இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், பி.இ., பி.டெக் படிப்புகளில் நேரடி 2 -ஆம் ஆண்டு படிப்பதற்கான கலந்தாய்வு வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.