THAMIZHKADAL TODAY NEWS

'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப் பிரிவுக்கு மாற வாய்ப்பு - தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவு

'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப் பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது.மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காகமாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும். அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.



திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது :

ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின்கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்துமே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவைமையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியையும் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர். தமிழகத்தில் 3,600 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டி உள்ளது.



இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.) மாநில தலைவர் ஏ.டி. கண்ணன்நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கல்விக்கு ஆண்டுதோறும் ₹28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன. பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தில் அரசுக்கு அக்கறை இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தமிழக அரசு பள்ளிகளில் இல்லை. பல்வேறு அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகள்கூட இல்லாமல் உள்ளன.இதனால் அரசு பள்ளிகளை வெறுத்து, மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால் கேரளாவில் தனியார் பள்ளிகளில் இருந்து மக்கள் அரசு பள்ளிகளை நாடி வருகிறார்கள்.



மத்திய அரசு நாடு முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடஉத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 3,600க்கும் அதிகமான அரசு பள்ளிகள் மூடப்பட உள்ளன. தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டால் ஏழை, நடுத்தர மாணவர்களின் தொடக்க கல்வியே கேள்விக்குறியாகி விடும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என கட்டாய கல்வி சட்டம் கூறுகிறது. ஆனால் இருக்கும் பள்ளிகளை அரசு மூடி வருகிறது.



எனவே, மத்திய, மாநில அரசுகளின் கல்வி விரோத போக்குகளை கண்டித்தும், கல்வியை பாதுகாக்க ேகட்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்தும் சைக்கிள் பிரசார பயணம் தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel