Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்தும் பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ ) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. பிளஸ் 2 ( ஐஎஸ்சி) பொதுத்தேர்வு பிப்ரவரி 4 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வை 2,247 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 மாணவ, மாணவியரும், ஐஎஸ்சி பிளஸ் 2 தேர்வை 86,713 மாணவ, மாணவியரும் எழுதினர்.



இந்தநிலையில் இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் www.cisce.org இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியானது.

இதில் பிளஸ் 2 வகுப்பில் 96.52 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பில் 98.54 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 83 ஐசிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 3,831 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 99.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 மாணவர்களும், ஒரு மாணவியும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
அதே போன்று பிளஸ் 2 தேர்வை 49 ஐஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,646 மாணவ, மாணவியர் எழுதியதில் 99.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 7 மாணவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.