பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் புதன்கிழமை முற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத் தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து புதன்கிழமை (மே 8) முதல் வெள்ளிக்கிழமை (மே10) மாலை 5 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
கட்டணம்: மறுமதிப்பீடுக்கு பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.505 செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel