Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 11, 2019

33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான துரியன் பழம்


முன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில், பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது. ஒரு சிலருக்கு பழங்களின் அரசனாக இருக்கும் துரியன் பழங்கள், பிறருக்கு நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக இருக்கிறது.

உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை கொண்டுள்ள துரியன் பழங்கள், பொதுப் போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் சில நாடுகளில் விமானங்களில் எடுத்து செல்வதற்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற 'கிங் ஆஃப் துரியன் பெஸ்டிவல்' எனும் நிகழ்வின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட ஏலத்தில், மரத்திலிருந்து பறிக்கப்பட்டு ஒரே நாளான இந்த துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது