கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில்காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு





கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டசெய்தி குறிப்பு.கோயமுத்தூர் மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 நகல் பரிசோதகர் மற்றும் நகல் படிப்பவர், 16 முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 21 அலுவலக உதவியாளர், 16 காவலர் மற்றும் இரவுக் காவலர், மசால்சி மற்றும் இரவு காவலர், 4 துப்புரவு பணியாளர், 5 பெருக்குபவர் மற்றும் 10 மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் கோயமுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற வலைத்தளமான districts.ecourts.gov.in/Coimbatoreஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வரும் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.எனவே விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்காணும் இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
Share:

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories