Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2019

டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


டாக்டர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


நிகழாண்டுக்கான விருதுக்கு தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியும், ஆனால் அகராதிகளில் இதுவரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாய சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் போன்ற பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நூலின் படைப்பாளிக்கு, டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுடன் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும்.
நிபந்தனைகள் : 1)நூல் படைப்பு 2018 -ஆம் ஆண்டில் இருக்க வேண்டும். 2) நூலின் இரு பிரதிகளை அனுப்ப வேண்டும். 3)நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் : ஜூன் 30 -ஆம் தேதி. விருதும், பரிசுகளும் வழங்கும் நாள் ஜூலை 21-ஆம் தேதி.


நூலை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: ப. தங்கராசு, தலைவர், டாக்டர் வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது, 5/45, எல்.ஆர்.ஜி. நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு கரூர் - 639 008- என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.