Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 11, 2019

பிளாஸ்டிக் குப்பிகளில் தண்ணீர் குடிப்போருக்கு கவனத்திற்கு



இப்போதெல்லாம் உலகில் வாழும் பொது மக்கள் தினசரி வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளது. இதுவே அந்த மாற்றத்திற்கு காரணமாகியுள்ளது.



மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் குப்பிகளை எடுத்து செல்கின்றனர்.

சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி மினரல் தண்ணீர் குப்பி களையும் மக்கள் வாங்கி பருகுகின்றனர்.இவை அதிகமாக பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி குளிர்பானங்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் வருகின்றன. இந்தவேளையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பவர்கள் வருடத்துக்கு 52 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வு ஒன்றில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.