Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அவை பின்வருமாறு:
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும்
அத்துடன் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்.
கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் ரூ.1 கோடி செலவில் இந்த கலாந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 100 டிப்ளமோ மாணவர்களின் திறனை உலகளாவிய அளவில் மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.
இந்த தொழில்நுட்ப பயிற்சி திட்டம் ரூ.1.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.