Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 11, 2019

எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா?

பாரத ஸ்டேட் வங்கிஎனப்படும் எஸ்.பி.ஐ-யில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலபர், சிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர், டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர், ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணிகள்:

ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ்

காலிப்பணியிடங்கள்:

டெவலபர் (Developer) - 181
சிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் (System / Service Administrator) - 47
டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் (Database Administrator)- 29
ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் (IT Security Expert)- 61
உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் = 477 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 06.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.09.2019
தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 20.10.2019



வயது உச்சவரம்பு:

30.06.2019 அன்றுக்குள், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:

தொடக்க ஊதியமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.59,170 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:

பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.

தேர்வுக்கட்டணம்:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.125
பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750

குறிப்பு:

செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பி.இ (கம்யூட்டர் சயின்ஸ்) / பி.டெக் (ஐ.டி) / எம்.பி.ஏ / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி (ஐ.டி) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அத்துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:

பணிகளுக்கு தகுந்தாற்போல, குறிப்பிட்ட பணி சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.







விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.sbi.co.in/careers/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement%20SCO-2019-20-11.pdf மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-ADVT%20CRPD-SCO-2019-20--13.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment