THAMIZHKADAL TODAY NEWS

பி.எட் படித்தவர்களுக்கு ராணுவ பொதுப் பள்ளிகளில் வேலை


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

PGT, TGT மற்றும் PRT ஆகிய பிரிவுகளில் மொத்தம் 8000 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

PGT பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். TGT பணியிடங்களுக்கு இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். PRT பணியிடங்களுக்கு இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



வயதுவரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.awesindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.



எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.10.2019 மற்றும் 20.10.2019

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2019
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel