Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 4, 2019

நவராத்திரி கொலு - உயிரினங்களின் பரினாம வளர்ச்சி தத்துவ விளக்கம்

திருச்சி அமிர்தா யோக மந்திரத்தில் நவராத்திரி கொலு அமைத்து உயிரினங்களின் பரினாம வளர்ச்சி தத்துவத்தை எடுத்துரைத்துனர்
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவமாக வழிபட வேண்டும். நவராத்திரி பண்டிகையின் போது கோதுமை, பச்சரிசி, துவரை, பச்சைப் பயறு, கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு ஆகிய நவதானியங்களை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.


10 வயது நிரம்பாத கன்னிகையைக் கொண்டு நவ கன்னிகை வழிபாட்டினை கடைபிடித்து வருகிறார்கள்.
முதல் நாள் இரண்டு வயதுக் குழுந்தை குமாரி ,இரண்டாம் நாள் 3 வயது குழந்தை திரிமூர்த்தி, மூன்றாம் நாள் 4 வயது குழந்தை கல்யாணி, நான்காம் நாள் 5 வயது குழந்தை ரோகிணி, ஐந்தாம் நாள் ஆறு வயது குழந்தை காளிகா, ஆறாம் நாள் 7 வயது குழந்தை சண்டிகா, ஏழாம் நாள் 8 வயதுக் குழந்தை சாம்பவி, எட்டாம் நாள் 9 வயது குழந்தை துர்கா, ஒன்பதாம் நாள் 10 வயது குழந்தை சுபத்ரா என நவ கன்னிகை வழிபாட்டினையும் பின்பற்றி வருகிறார்கள்.
கொலுவில்

முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளும்

இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளும்

மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளும்

நாலாம் படியில் நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளும்

ஐந்தாம் படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளும்



ஆறாம் படியில் ஆறறிவு மனிதர்கள் பொம்மைகளும்

ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் பொம்மைகளும்

எட்டாம் படியில் தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளும்

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவனை வைத்து நவராத்திரி கொலுவினை வழிபட வேண்டும் என

யோகாசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் விளக்கினர்.