Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 10, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.




நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.




அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, உதவிகளை செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பதிவு செய்த மாணவர்களின் விபரங்களையும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வாரியாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.