Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 14, 2019

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி!!


தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதால் வாக்குச்சாவடியில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை அனைத்து அரசுத்துறைகளும் சேகரித்து வருகின்றன அந்தவிவரத்தில் உங்கள் பாகம் எண் வரிசை எண் குறிப்பிடவேண்டும். நீங்கள் கையில் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பாகம் எண் வரிசை எண் தற்போது உள்ள பட்டியலில் உள்ள எண்ணுடன் பொருந்தாது. எனவே அதை குறிப்பிடவேண்டாம்.கடந்தஆண்டு பயன்படுத்திய எண்ணையும் குறிப்பிடவேண்டாம். ஏனெனில் தற்போது மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. தவறாக குறிப்பிட்டால் தபால் ஓட்டு கிடைக்காது.




அதற்கு கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள்

முதலில் உங்கள் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த லிங்கில் சென்று உங்களுடைய வாக்கள அடையாள அட்டை எண்ணை டைப் செய்தால் தோன்றும் வரிசை எண் மற்றும் பாக எண்ணை மட்டும் பயன்படுத்தவும்.




http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php