JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு வரும் ஜன.27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு 1.1.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் பூா்த்தி அடைந்த தனித் தோ்வா்கள் ஜன.27-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம்.
முதன்முறையாக தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள்
ஏற்கெனவே தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலைக் கண்டிப்பாக இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
தனித்தோ்வா்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.
ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தோ்வுக்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளாா்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:
WEBSITE 1 : CLICK HERE
WEBSITE 2 : CLICK HERE
WEBSITE 3 : CLICK HERE