
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து ஏன்? : பாடத்திட்ட குளறுபடி காரணம் என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து ஏன்? : பாடத்திட்ட குளறுபடி காரணம் என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
தமிழ்க்கடல்Wednesday, February 05, 2020

சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளால் 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பலரும் மனஉளைச்சல் அடைந்தனர்.
இது தமிழக அரசுக்கு எதிர்ப்பு அலையாக மாறியது. கல்வித்துறை மீது பல்வேறு தரப்பினரும் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். குறிப்பாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகள், 1 முதல் 8ம் வகுப்பு வரை நடக்கும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 3வது பருவ முறை பாடப்புத்தகங்களில், பொருளடக்கம் என்ற பகுதியில் பட்டியலிட்டு சில விவரங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினர். அதன்படி, சில பாடங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டும். இதைப் பின்பற்றி ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வந்தனர். ஆனால், 5, 8ம் வகுப்பு தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அட்டவணை வெளியிட்டதால் குழப்பம் அதிகரித்தது. சில பாடங்களை மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் நடத்த வேண்டும் என்று தெரிவித்த பின்னர் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது.
பிப்ரவரி மாதத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது சாத்தியமில்லை. மாணவர்களும் குறுகிய காலத்தில் கற்றல் அனுபவங்களை பெற முடியாது. அதனால், மேற்கண்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதுதவிர, முதல் பருவம், இரண்டாம் பருவத்துக்கான பாடங்களை நடத்தி முடித்து அவற்றுக்கு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை மாணவர்கள் படித்து பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்பது கடினமான காரியம். அதனால் மாணவர்கள் மீண்டும் இரண்டு பருவ பாடப்புத்தகங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும். திட்டமிடப்படாமல் தேர்வு தேதி அறிவித்ததால் பாடம் நடத்துவதில் குளறுபடி ஏற்பட்டது. அதனால் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8ம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாடப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து ஆசிரியர்கள் தரப்பில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் தான் மேற்கண்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.
THAMIZHKADAL TODAY NEWS
Popular Posts
-
மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு "TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிர...
-
அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இயக்குநர் (மு.கூ.பொ.) ச. அருண்ராஜ் தெரிவித்...
-
நவ. 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு. துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவின...
-
13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Celebration of Children's Day - Dis...
-
திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை அருகே அரசு உதவி பெறு...
-
மௌலானா அபுல் கலாம் ஆசாத் திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:53. சுற்றந் தழால் குறள் எண்:527 குறள்: காக்கை கரவா கரைந்து...
-
திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:53. சுற்றந் தழால் குறள் எண்:529 குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம்...
-
தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் (NHIS) கீழ் ஒரு சில நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொகை விவரம் NHIS 2026 குறித்த ...
-
சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் என்னைப் பார்க்க ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன்...
-
NHIS மின்னணு அடையாள அட்டையை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - Press News 12.11.26 அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங...
Recent Posts
Featured Post
BUS PASS EMIS ENTRY- 20.11.2026 வரை அவகாசம் - DSE செயல்முறைகள்
BUS PASS EMIS ENTRY- 20.11.2026 வரை அவகாசம் - DSE செயல்முறைகள்
Total Pageviews
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Categories
- 1-5 (548)
- 10 வகுப்பு (646)
- 10TH ENGLISH (5)
- 10TH MATHS (11)
- 10TH SCIENCE (13)
- 10TH SOCIAL SCIENCE (5)
- 10TH TAMIL (12)
- 11TH CHEMISTRY (2)
- 11TH ENGLISH (1)
- 11TH PHYSICS (1)
- 11TH TAMIL (1)
- 11வகுப்பு (141)
- 12 வகுப்பு (260)
- 12TH CHEMISTRY (4)
- 12TH ENGLISH (2)
- 12TH MATHS (1)
- 12TH PHYSICS (1)
- 12TH TAMIL (6)
- 6-9 வகுப்புகள் (295)
- 6TH TAMIL (1)
- 7TH TAMIL (1)
- 8TH ENGLISH (3)
- 8TH MATHS (1)
- 8TH SCIENCE (1)
- 8TH SOCIAL SCIENCE (2)
- 8TH TAMIL (2)
- 9 வகுப்பு (8)
- 9TH SCIENCE (1)
- 9TH SOCIAL SCIENCE (2)
- 9TH TAMIL (2)
- AADHAAR (39)
- ACCOUNT SLIP (1)
- ADMISSION (79)
- Android Apps (162)
- Annual Planner (1)
- ANSWER KEY (88)
- APPA APK (2)
- Artificial intelligence (6)
- ASSESSMENT (1)
- Audio (18)
- B.Ed M.Ed (16)
- BANK (10)
- BE (4)
- BEO (5)
- BONUS (1)
- BOOKS (13)
- BUDGET (25)
- BULLETIN (2)
- CBSE BOOKS (6)
- CBSE EXAMS (4)
- CBSE NEWS (6)
- CCE (50)
- CENSUS NEWS (12)
- CEO செயல்முறைகள் (122)
- Certificate (1)
- Chat GPT (1)
- CM CELL (8)
- CM LETTER (8)
- COACHING CENTRE (1)
- COLLEGE LINKS (1)
- COMPETITIVE EXAMS (1)
- COMPLETE MATERIALS (34)
- COMPUTER (7)
- Contact Numbers (3)
- COURT ORDER (99)
- CPD TRAINING (12)
- CPS (197)
- CRC (62)
- CSAT (2)
- CSIR (6)
- CTET (2)
- Current Affairs (49)
- D A (109)
- DEO செயல்முறைகள் (16)
- DEPARTMENTAL EXAM (6)
- DIGIPIN (1)
- DUPLICATE (1)
- E - Filing (6)
- E - LEARN (7)
- E PASS (3)
- E-Certificate (1)
- E-SR (1)
- EDUCATION NEWS (2873)
- EL Surrender (18)
- ELECTION NEWS (326)
- EMIS (290)
- Employment News (314)
- Ennum Ezhuthum (265)
- EQUIVALENCE (24)
- EXAMS (269)
- FEES PAYMENT (2)
- FONTS (12)
- Forms (441)
- Future Ready (1)
- G K (108)
- G.Os (779)
- GATE (3)
- GAZETTE (7)
- GENERAL KNOWLEDGE (14)
- GENERAL NEWS (345)
- GENUINENESS (6)
- GPF (47)
- Grama Sabha (1)
- GRATUITY (2)
- GST (2)
- HALL TICKET (164)
- Hand Book (2)
- HI TECH LAB (32)
- HISTORY GK (2)
- HOLIDAY (1)
- ICT (227)
- IFHRMS (109)
- IGNOU (1)
- IMAGES (1)
- IMPORTANT LINKS (11)
- INCENTIVE (2)
- INCOME TAX (278)
- INCREMENT (2)
- INSPIRE AWARD (9)
- INSURANCE (1)
- ISRO (1)
- ITK (39)
- JEE (1)
- KALANJIYAN (65)
- Kalvi Tv Videos (44)
- LAB ASSISTANT (8)
- LEARNING OUTCOMES (8)
- Leave Rules (6)
- LESSON PLAN (118)
- LEVEL UP (3)
- LIVE TV (1)
- Loan & Advances (7)
- LOGO (1)
- MAGAZINE (5)
- MANARMENI (11)
- MASTER HEALTH CHECK (2)
- Maternity Leave (2)
- Mobile App (2)
- NAMMA ARASU (1)
- NAS (12)
- NEET (91)
- NET (18)
- NEWS (6)
- NHIS (59)
- NMMS (35)
- NOC (8)
- NOTIFICATION (21)
- NSS (1)
- ONLINE CLASS (2)
- ONLINE LINKS (10)
- ONLINE TEST (79)
- OOSC (2)
- OTHER BOOKS (6)
- PALLI PARVAI (1)
- PANEL (1)
- Paper Valuation (13)
- PASSPORT (2)
- Pay Commission (12)
- Pay Matrix (4)
- PAY ORDER (96)
- PAY SLIP (1)
- PENSION (6)
- PERMISSION (1)
- PG TRB (4)
- PG TRB BOTANY (2)
- PG TRB Economics (1)
- PG TRB ENGLISH (3)
- PG TRB GEOGRAPHY (1)
- PG TRB HISTORY (1)
- PG TRB PHYSICS (1)
- PG TRB TAMIL (1)
- PHONE NUMBER (1)
- PINDICS (2)
- PM YASASVI (1)
- POCSO (5)
- POLICE (80)
- POSTAL (11)
- PROMPT (1)
- PSTM (2)
- PTA (6)
- PUBLISHED (5)
- QR CODE VIDEOS (19)
- QUESTION PAPERS (100)
- R H LIST (20)
- RAILWAY (1)
- REGULARISATION ORDER (1)
- RESULT (517)
- RETIREMENT (1)
- RMSA (4)
- RRB (17)
- RTE (28)
- RTI LETTERS (241)
- SAFETY AND SECURITY (4)
- SCHOLARSHIP (5)
- SCHOOL CALENDAR (59)
- School Children Movie (1)
- SCHOOL DIARY (2)
- SCHOOL SPEECH (1)
- SEAS NEWS (7)
- Service Register (2)
- SET (16)
- SHAALA SIDDHI (8)
- SLAS (19)
- SMART CLASS (2)
- SMC (135)
- SOFTWARE (4)
- SPF (2)
- SSC (2)
- State Education Policy (6)
- STET (4)
- SURPLUS (1)
- SYLLABUS (32)
- TAMIL MP3 SONGS (69)
- TAPS (43)
- TDS (6)
- TEACHERS NEWS (1)
- TET (439)
- TEXT BOOK (90)
- THIRAN (3)
- THIRAN HAND BOOK (5)
- TIME TABLE (116)
- TNEB (6)
- TNPSC (589)
- TNSED (196)
- Today News (9)
- TPF (1)
- Tr (6)
- TRAINING (43)
- TRANSFER (82)
- TRB (494)
- TRB ALL SUBJECT (4)
- TRB-TET-NET (50)
- TRUST (1)
- TTSE (2)
- UDISE (18)
- UG TRB (7)
- UPS (8)
- UPSC (19)
- VACANCY LIST (3)
- Vanavil Mandram (1)
- VAO (12)
- VIDEO (25)
- VIDEO STORIES (10)
- VRS (3)
- WHATSAPP GROUPS (1)
- WORK SHEET (44)
- YEAR BOOKS (3)
- YOUTUBE VIDEOS (1)
- அகராதி நூல்கள் (1)
- அகல் விளக்கு (2)
- அக்கு பஞ்சர் (19)
- அபார் அட்டை (3)
- அரசிதழ் வெளியீடு (8)
- அரசு திட்டங்கள் (1)
- அரசு விடுமுறை (13)
- அரியது (21)
- அறிவிப்புகள் (13)
- அறிவியியல் (157)
- அன்புக்கரங்கள் (5)
- ஆசிரியர் மனசு (1)
- ஆச்சர்யம் (1)
- ஆணையர் செயல்முறைகள் (136)
- ஆய்வுகள் (22)
- ஆன்மீகம் (26)
- இட ஒதுக்கீடு (1)
- இயக்குநர் செயல்முறைகள் (948)
- இயற்கைவேளாண்மை (5)
- இலக்கணம் (128)
- இலக்கியம் (70)
- இளம் அறிவியல் விஞ்ஞானி (2)
- இளம் கவிஞர் விருது (1)
- இன்றைய செய்திகள் (1)
- உடல்நலம் (1863)
- உதவித்தொகை (2)
- உபரி பணியிடங்கள் (2)
- உள்ளூர் விடுமுறை (104)
- உறுதிமொழி (11)
- ஊக்க ஊதியம் (2)
- ஊக்கத்தொகை (11)
- ஊதிய உயர்வு (74)
- ஊராட்சி மணி (2)
- எழுத்தறிவுத் திட்டம் (11)
- என் கல்லூரி கனவு (1)
- ஓய்வூதியம் (44)
- ஓய்வூதியர் கையேடு (2)
- கட்டுரை (57)
- கண்ணும் கருத்தும் (1)
- கதைகள் (1)
- கருணை அடிப்படை (4)
- கருவூலகச்செய்திகள் (3)
- கலந்தாய்வு (232)
- கலைத் திருவிழா (58)
- கல்வி உளவியல் (84)
- கல்விச்செய்திகள் (18319)
- கவிதை (64)
- கற்றல் விளைவுகள் (2)
- கனமழை செய்தி (77)
- கனவு ஆசிரியர் (14)
- காமராஜர் (6)
- காலை உணவு திட்டம் (44)
- காலை வழிபாடு (882)
- கிராம சபை கூட்டம் (2)
- கூட்டுறவு சங்கம் (3)
- கையேடு (24)
- சட்டம் (17)
- சிறப்பு வகுப்பு (1)
- சிறப்புச் செய்திகள் (33)
- சிறார் திரைப்படம் (30)
- சிற்றிதழ் (2)
- சொத்து (1)
- டிட்டோஜாக் (5)
- தகுதித் தேர்வு (6)
- தடையின்மைச் சான்றிதழ் (1)
- தமிழக பட்ஜெட் (9)
- தமிழ் இலக்கிய வரலாறு (2)
- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு (1)
- தமிழ் நூல்கள் (73)
- தமிழ் புதல்வன் (1)
- தமிழ் மன்றம் (1)
- தமிழ்ப் புதல்வன் (7)
- தரவரிசைப் பட்டியல் (1)
- தலைமையாசிரியர் கையேடு (3)
- திருக்குறள் (1)
- திருக்குறள் விளக்கம் (1)
- திரைப்படம் (1)
- திறனறிவுத் தேர்வு (36)
- திறனாய்வுத் தேர்வு (1)
- திறன் இயக்கம் (32)
- தினம் ஒரு திருக்குறள் (7)
- தெரிந்து கொள்வோம் (1)
- தெரிந்துகொள்வோம் (1)
- தேர்வு (1542)
- தொலைபேசி எண்கள் (1)
- தொழில்நுட்பச் செய்திகள் (263)
- நடத்தை விதிகள் (1)
- நம்பிக்கை (69)
- நலத்திட்டங்கள் (1)
- நான் முதல்வன் (29)
- நீதிக் கதைகள் (157)
- நீதிமன்றம் உத்தரவு (37)
- நுழைவு தேர்வு (8)
- படித்ததில் பிடித்தது (3)
- பட்டா (1)
- பணிக்கொடை (2)
- பணிமூப்பு பட்டியல் (1)
- பணிவரன் முறை ஆணை (4)
- பண்டிகை (2)
- பதவி உயர்வு (296)
- பத்திரப் பதிவு (1)
- பயனுள்ள தகவல் (9)
- பலகாரம் (20)
- பழமொழி (2)
- பள்ளி பார்வை (2)
- பள்ளிப் பார்வை (1)
- புதுமைப்பெண் (1)
- புவிசார் குறியீடு (6)
- பெயர் பட்டியல் (2)
- பொது விடுமுறை (48)
- பொதுச் செய்திகள் (5061)
- மகப்பேறு விடுப்பு (1)
- மகளிர் உரிமைத் தொகை (14)
- மகிழ் முற்றம் (10)
- மத விடுப்பு (4)
- மத விடுமுறை (3)
- மருத்துவம் (967)
- மன்றங்கள் (6)
- மாணவர் மன்றம் (10)
- மானியக் கோரிக்கை (1)
- முக்கிய அறிவிப்பு (1)
- முக்கிய தினங்கள் (1)
- முத்திரைகள் (3)
- முன்பணம் (2)
- முன்னுரிமை பட்டியல் (2)
- மொழித் தேர்வு (1)
- யாப்பிலக்கண நூல் (1)
- யோகா (1)
- யோகாசனம் (47)
- ராசி பலன்கள் (12)
- வங்கிச் செய்திகள் (72)
- வரலாற்றில் இன்று (440)
- வரலாற்றுத் தகவல்கள் (9)
- வாசிப்பு இயக்கம் (9)
- வாழ்க்கை வரலாறு (22)
- வாழ்த்துத் செய்தி (22)
- வானவில் மன்றம் (7)
- வாஸ்து சாஸ்திரம் (6)
- விண்ணப்பிக்க (1213)
- விருதுகள் (27)
- விழிப்புணர்வு (1)
- வெற்றிப் பயணம் (1)
- வேலைவாய்ப்புச்செய்திகள் (1918)
- ஜாக்டோ ஜியோ (82)
- ஜோதிடம் (344)
Copyright ©
தமிழ்க்கடல் | Powered by Blogger








