Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 8, 2020

ஐடிஐ, பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை!



மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ஐடிஐ, இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 56

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
ITI Apprentice - 26
P&O Professional - 04
Audiologist - 25
Team Leader - 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.




தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் alimco.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Manager (Personnel & Administration), Artificial Limbs Manufacturing Corporation of India, Naramau, G. T. Road, Kanpur-209217




விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://alimco.in/WriteReadData/Recruitment_Document/AD-3M-011/1_Apprenticeship.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.