Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 5, 2020

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை!!


ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், மனிதவள மேலாண்மை, நிதியியல், சட்டம் போன்ற 46 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்: 46

1. Finance -10
2. HR -10
3. Management -17
4. Civil Engineering - 03
5. Law - 05
6. Fire & Security - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 01.12.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை : www.shipindia.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

www.shipindia.com/upload/Adv/AM_contract_detailed_Advertisement_22_01_2020-converted.pdf

என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020.