Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 16, 2020

வேணா கொரோனா - கவிதை

வாரன்ட்டி இல்லாத நாட்டுல இருந்து
உசுர எடுக்க கேரன்ட்டியோட வந்திருக்கு கொரோனா
சித்தர் பாட்டுல சிலப்பதிகார நோட்டுல நோய பத்துன குறிப்பிருக்குனு அலையுதுக வேலையத்த குரூப்பு
வேண்டாத வேலைய வம்படியா பாக்க தமிழனா இருந்தா ஷேர் பன்னுனு சொல்லித் திரியுதடா ஒரு தரப்பு
மேல்நாட்டு வியாதி இது மேல்பாகத்த அதிகம் தாக்குது
தும்மி இருமி மூச்சிரைக்க வைக்குமாம் கொரனா கிருமி
சுத்தம் இல்லாட்டி வாலாட்டி வலம் வருமாம் உருமி
கூட்டமா கூடாத



எவனா காச தர்ரான்னு கும்பலா ஓடாத
வாராத நோய் சுமந்து மனம் நோக வாடாத
எச்சி தெறிக்க பேசாத
சுய சுத்தம் செஞ்சிக்க கூசாத
கைய கழுவு அடிக்கடி
கைக்குட்டையே இப்போதைக்கு முகமூடி
தாத்தா பாட்டி காலத்துல இல்லாத நோயெல்லாம் உலவுது தேசத்துல
குளிரான பொருளுல கிருமி குடியிருக்குதாம் இந்த வெயில் மாசத்துல
பிஞ்சு பெரிசுனு பாக்காது
சுத்தமா இருந்திட்டா நோய் அறவே தாக்காது
புரளி பேசி அரளி வைக்காம
புரிஞ்சு நடந்து நோய விரட்டு



வேணா நமக்கு கொரோனா
சுத்தமிருந்தா சத்தமில்லாம அதுவும் விலகிடும் தானா

அதுவரை வதந்திய பரப்பாதீங்க வீணா




*சீனி.தனஞ்செழியன்*

No comments:

Post a Comment