SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Sunday, March 8, 2020

பெண்மையைப் போற்றுவோம்

வளையல் பூக்களே
உங்களுக்கென் மகிழ்வணக்கங்கள்
இந்த பூமிப்பந்தின்
அற்புதம் நீங்கள்
உயிராக்கி உயிராகி
யாவுமாகிற மகாசக்திகளே..

குடும்பவிளக்கில் வெளிச்சம் தந்தே கருகி நிற்கும் திரிகளே

வலியோ துயரோ உள்ளுக்குள்ளேயே விசும்பிக்கொள்ளும் மெல்லினங்களே

கண்ணீர் வாழ்வெனினும் போராடி கரைகாணும் வைராக்கியங்களே

இல்லமோ அலுவலகமோ நொடிப்பொழுதும் ஒய்வறியா குளிர்சூரியன்களே

அன்பும் அனுசரணையுமே உங்களின் இருவிழிகள்
ஆயிரம் அர்த்தம் தாங்கும் உங்கள் மௌனமொழிகள்
வர்ணனையின் ஊற்றுகள்
மகிழ்ச்சியின் நாற்றுகள்

மகளாய்
சகோதரியாய்
மனைவியாய்
அன்னையாய்
பிரபஞ்சத்தை இயக்குகிற பேராற்றல் நிலவுகள்

உதட்டளவில் உயர்த்திப்பிடித்தாலும்
இரண்டாம்பட்சமாகவே
கருதிக்கிடக்கிற இவ்வுலகில்
போராடி
சகித்து
வலிதாங்கி
சமம் கடந்து சாதிக்கிற
உங்களுக்கென் பூங்கொத்து

*நீரின்றி அமைவதேது நல்லுலகு?*

இனிய மகளிர்தின வாழ்த்துகள்

அன்புடன்,
*சீனி.தனஞ்செழியன்*

No comments:

Post a Comment