Tuesday, March 17, 2020

ஏழு நாட்களுக்கு அரசு அலுவலகங்களை மூட உத்தரவு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு அரசு அலுவலகங்களை மூட மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் மும்பையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒரு வார காலத்திற்கு அரசு அலுவலகங்களை மூட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.



முன்னதாக மும்பை உள்ளூர் ரயில் சேவை தற்காலிக நிறுத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வார காலத்திற்கு அவசர கால சேவைகள் இருக்கும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment