Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 9, 2020

முக்கிய பாடங்கள் தேர்வு இன்று தொடக்கம்,தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு!


பிளஸ் 2 வகுப்புக்கான கணிதம், வணிகவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்று முதல் (மார்ச் 9) தொடங்குகின்றன.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்தேர்வுகள் முடிந்த நிலையில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்று முதல் (மார்ச் 9) தொடங்க வுள்ளன.
மாநிலம் முழுவதுள்ள 3,012மையங்களில் 8.3 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.



நடப்பு ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட் டுள்ளதால் தேர்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், அறை கண்காணிப்பாளர் பணியில் 41,500 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை 9385494105, 9385494115, 9385494120 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 24-ல் முடியவுள்ள சூழலில், முடிவுகள் ஏப்ரல் 24-ம்)தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு
பிளஸ் 2 வகுப்புக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment