Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 24, 2020

புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை



மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் NICPR எனும் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபீசர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 117 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICPR)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப்பணியிடங்கள் : 117
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
டெக்னிக்கல் ஆபீசர் T - 87
டெக்னிக்கல் ஆபீசர் A - 3
டெக்னிசீயன் - 10
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 8
மல்டி டாஸ்கிங் பணியாளர் - 9
வயது வரம்பு :
டெக்னிக்கல் ஆபீசர் T, டெக்னிக்கல் ஆபீசர் A,டெக்னிசீயன்ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மல்டி டாஸ்கிங் பணியாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nicpr.icmr.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment