Search This Blog

Saturday, June 6, 2020

10,11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன்

0 comments

10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு தொடர்ந்து பரீசிலனை செய்து வருவதாக கூறியுள்ளார். தேர்வு சமயத்தில் காய்ச்சல் பாதிப்புள்ள மாணவர்களை தனியாக அமர வைத்து தேர்வு நடத்துவது தொடர்பாகவும் பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வரும் 8 மற்றும் 9 ம் தேதிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியவரும் என்று கூறியவர், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து புறக்கணித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment