JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, July 25, 2020

10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை




மத்திய அரசிற்கு உட்பட்ட யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 136 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL)

மொத்த காலிப் பணியிடம் : 136

பணி : அப்ரண்டிஸ்

கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cdn.digialm.com என்ற இணையதளம் மூலம் 10.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் கணினி அடிப்படையிலான சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdn.digialm.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment