சென்னை: ஆடி மாதம் சூரியன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான கடக மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் காற்றும் மழையும் பூமி குளிர பெய்யும். ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள்
நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாத ராசிபலன்களைப் பார்க்கலாம்.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசி, செவ்வாய் மீனம் ராசி, புதன் மிதுனம் ராசி ஆடி 17க்கு மேல் கடக ராசி, குரு தனுசு ராசி, சுக்கிரன் ரிஷபம் ராசி ஆடி 16க்கு மேல் மிதுனம் ராசி, சனி மகரம் ராசி, ராகு மிதுனம் ராசி, கேது தனுசு ராசி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.
மேஷம்
மேஷம் ராசிக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம், ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன், இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, குரு, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
புதன் மூன்றாம் இருப்பதால் தைரியம் தன்னம்பிக்கை கூடும். மாத இறுதியில் சுக்கிரன், புதன் இடம்மாறுவது கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குருபார்வை நன்மையை கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வர ஆசைப்படுபவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த வீண் பழி நீங்கும்.
சுபகாரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் இந்த மாதம் உங்க ராசிக்குள் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் ராகு,மூன்றாம் வீட்டில் சூரியன், அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் மாற்றத்தின் படி மாத பிற்பகுதியில் புதன் மூன்றாம் வீட்டிற்கும் சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கும் நகர்கின்றன. ஆடி மாதம் கவலைகள் நீங்கும் மாதமாக அமையப்போகிறது. உங்க ராசிநாதன் இதுநாள் வரை உங்க ராசியில் இருந்தார். மாத பிற்பகுதியில் ராசி நாதன் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து ராகு உடன் இணைகிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்குள் ராகு,புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க ராசிக்குள் இருந்து மாத பிற்பகுதியில் புதன் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார்.
மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விஐபிக்களின் அறிமுகம் தேடி வரும். கடன் பிரச்சினைகள் தீரும். உங்க ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சிலருக்கு புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
கடகம்
கடகம் ராசிக்குள் சூரியன், ஆறாம் வீட்டில் குரு கேது, ஏழாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கடகம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மகிழ்ச்சிகள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. சந்தோஷமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். இந்த மாதம் உங்க ராசியில சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு. மாத பிற்பகுதியில் புதன் உங்க ராசிக்கு வந்து சூரியனோடு இணைகிறார். உங்க முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் தீரும். பணக்கஷ்டங்கள் நீங்கும் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் அதன் மூலம் நன்மைகள் நடைபெறும். முன் கோபத்தை குறைத்து நிதானமாக இருங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு தேடி வரும் பயன்படுத்திக்கங்க. வருமானம் வருவது போல செலவுகளும் தேடி வரும். சிக்கனமாக செலவு பண்ணுங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன உரசல்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக அமையப்போகிறது. அதே நேரத்தில் சில சாதங்களும் சில பாதகங்களும் நடைபெறப்போகிறது. உங்க ராசி நாதன் சூரியன் விரைய ஸ்தானத்தில இருக்கிறார். லாப ஸ்தானத்தில் ராகு, புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், எட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் புதன், கேது, ஆறாம் வீட்டில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. எந்த காரணத்திற்காகவும் கோபப்படாதீங்க கோபத்தோடு எழுபவன் நஷ்டப்பட்டுதான் உட்கார வேண்டியிருக்கும் என்பதால் கவனமாக இருங்க. பொறுமையாக பேசுங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நீங்க எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் போகணும் காரணம் எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பது சிறப்பானதல்ல. குரு பகவான் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் இடமாற்றத்தினால் நிறைய லாபம் வரும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் சுக்கிரன் இணையப்போகிறார். உங்க தொழில் ஸ்தான அதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகளில் பல மடங்கு லாபம் வரும்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடக்கப் போகிறது. ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், ராசி நாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் இணைந்து இருக்கிறார். மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் தீரும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நான்காம் வீட்டில் குரு, கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரன் இடப்பெயர்ச்சி ஆவது சிறப்பு. பத்தில் சுக்கிரன் பதவி உயர்வையும் வருமான உயர்வையும் கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இதுநாள்வரை வேலை போய்விடுமோ ஏதும் பிரச்சினை வந்து விடுமோ என்ற பயத்தோடும் பதற்றத்தோடும் இருந்திருப்பீர்கள்.
No comments:
Post a Comment