Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 31, 2020

சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு ஆக. 3 முதல் இணையவழி வகுப்புகள் தொடக்கம்!


கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகளும் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதற்கான இணைய தளங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இளநிலை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கு இணையவழி வகுப்புகளை தொடங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கவும், இளநிலை மாணவர் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. முதலாம் ஆண்டில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வருகைப் பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து தர வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment