THAMIZHKADAL Android Mobile Application

Tuesday, July 28, 2020

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : 500 கல்லூரிகளில் 2.64 லட்சம் இடங்கள் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தகவல்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : 500 கல்லூரிகளில் 2.64 லட்சம் இடங்கள் - அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தகவல்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 264 இடங்கள் இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 264 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளை வழங்கும் 357 கல்லூரிகளில், மொத்தம் 30 ஆயிரத்து 306 இடங்கள் இருப்பதாக அந்த கல்விக் குழு அறிவித்துள்ளது. இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் மொத்தமாக, 2 லட்சத்து 94ஆயிரத்து 570 இடங்கள் உள்ளதாக கூறியுள்ளது. பொறியியல் கலந்தாய்வை செப்டம்பர் 17முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News