Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 7, 2020

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் - புதினா ஜூஸ்

வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் - புதினா ஜூஸ் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

செய்முறை:

  • புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.
  • எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
  • இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும்.
  • அரைத்த விழுதுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும்.
  • சூப்பரான லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

No comments:

Post a Comment