Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 25, 2020

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நிறுவன முதல்வர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ இயங்கி வரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2020-21 ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பொதுப்பிரிவினர் மேல்நிலை பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதமும், , அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும்.

அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 27 ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை அனைத்து அலுவலக நாட்களிலும், லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.

மேலும், பள்ளி கல்வித்துறை இணையதளம் dse-edn.pon@nic.in ல் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன், வரும் 7 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment