Search This Blog

Wednesday, July 22, 2020

'இளநரை மறைந்து முடி கருமையாக வளர வேண்டுமா?'.. 'இதை மட்டும் செய்யுங்கள் போதும்'.. 'அவசியம் படிங்க'..

0 comments

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவருக்குமே உள்ள பெரிய பிரச்சனை என்றால் இளநரை தான். இதனால் இன்றைய இளைஞர்கள் வேலை சுமை, நேர பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் இளநரையை மறைக்க செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி தலையில் தடவி முடியை கருப்பாக வைக்கின்றனர்.

ஆனால் இதனால் பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்நிலையில் இந்த செய்தி தொகுப்பில் இளநரை பிரச்சனையை சரிசெய்ய இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

காபி தூள் - 1 டீஸ்பூன்

மருதாணி இலைகள்

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

தேவையான அளவு நீரை நன்கு கொதிக்கவைத்து அதில் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.பின்பு மருதாணி இலையை அரைத்து இந்த நீரில் சேர்த்து குளிரவைக்கவும்.சில மணி நேரம் இந்த கலவை நன்கு ஊற வேண்டும்.பின்பு இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் களைத்து முடியை அலசவும்.

No comments:

Post a Comment