JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
புதி தேசிய கல்வி கொள்கை குறித்து 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்துாரிரங்கன் தலைமையில் குழு வரைவு தேசிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ல் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் .இதில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.


அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment