அருகம்புல் தரும் நன்மைகள்


அருகம் புல்லின் சுவை உங்களுக்கு உடனடியாக பிடிக்காமல் போகக்கூடும். எனவே, அதை மற்ற ஜூஸ்கள் அல்லது பானங்களில் கலந்து குடிக்கலாம். டீ அல்லது மற்ற ஜூஸ்கள் அந்தப் புல்லின் சுவையை மறைக்க உதவலாம். புதினா, சீலரி, சாத்துக்குடி ஜூஸ், கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், கல் உப்பு போன்றவற்றை கலந்து ஜூஸ் காக்டெயில் செய்து அருந்தலாம்.

அருகம் புல் ஜூஸுடன் உடல்நலனுக்கு ஏற்ற எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் அல்லது ஃபிளாக்ஸ்சீடு ஆயில் போன்றவற்றை கலந்து அருந்துவதால், உடலில் ஊட்டச்சத்து ஏற்றுக்கொள்ளப்படும் அளவு அதிகரிக்கும். இது அடிக்கடி பசிக்கும் நிலையையும் குறைக்கும். ஜூஸாக குடிக்க முடியவில்லையா, பரவாயில்லை. துணை உணவாக, மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், திரவப் பொருள்களாகவும் நீங்கள் இதை உட்கொள்ள முடியும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories