Monday, August 10, 2020

கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம்: யுஜிசி


கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது.இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: கல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. தேர்வு கிடையாது என்பது மாணவர்களின் நலனுக்கான அறிவிப்பாக இருக்க முடியாது. கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது. மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிகளை மீறி தானாக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.விதிமீறல் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். பின்னர் இந்த வழக்கு, ஆக., 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News