தமிழகம் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை


உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.


கொரோனா வைரஸ் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel