Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 25, 2020

NEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற மத்திய அரசின் கல்வித்துறைச் செயலாளர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன் முதலமைச்சருக்கு திங்களன்று ( ஆக.24 ) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : மாநில பட்டியலில் இருந்த கல்வி , தற்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம். கல்வித்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை -2020 நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசும் இது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஆராய அமைக்கப்பட்ட குழுவும் அதன் பணிகளை தொடங்கவில்லை. இந்நிலையில் , மத்திய அரசின் கல்விச் செயலாளர் , ஆசிரியர்கள் , பள்ளி , கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்த தங்களுடைய கருத்துக்களை ஆக.31 க்குள் நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஆரோக்கியமான நடைமுறையல்ல. இது குறித்து ஆசிரியர்களக்கு முதலமைச்சர் ஆசிரியர்களுக்கு , ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment