JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு, நாளை (3 ல்) டிரைவர், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, ஜி.வி.கே., ஈ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை, 10:00 முதல், மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. டிரைவர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று, 23 வயது முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயரம், 162.5 செ.மீ.,க்கு மேல், இலகுரகவான ஓட்டுனர் உரிமம் எடுத்து, மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மேலும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம், 13 ஆயிரத்து, 200 ரூபாய். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., (டிப்ளோமோ நர்சிங்) பிளஸ் 2க்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் படித்து இருக்க வேண்டும்.
20 வயது முதல், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம், 13 ஆயிரத்து, 700 ரூபாய். மேலும் தகவல் பெற, 95978-03609 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment