Search This Blog

Sunday, September 27, 2020

பள்ளிகள் திறப்பு - செப்டம்பர் 29ல் தெளிவான முடிவு அறிவிக்கப்படும்!

0 comments
பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் முதற்கட்டமாக 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் புதிய 108 ஆம்புலன்ஸ் துவக்கி வைக்கும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. வரும் 29ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்து ஆய்வு நடத்த உள்ளேன். 

பின்னர் பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி திறப்பு குறித்து இறுதி முடிவை அறிவிப்பார்.மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்ப்பதற்கும் மட்டும் பள்ளிக்கு வரலாம். உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் தனது முடிவை அறிவிப்பார்” என்றார்.

No comments:

Post a Comment