JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றவை காலவதியாவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இந்நிலையில் மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்கள் டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து காலாவதியான அவணங்களை வைத்துக்கொண்டு எந்த வித அபராத கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த உரிமங்கள், முதற்கட்டமாக ஜூன் வரையும், அதன் பிறகு செப்டம்பர் இறுதி வரையும் ஏற்கனவே, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment