Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 10, 2020

பால்பெருங்காயத்தூளின் மருத்துவ குணங்கள்


முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் முறை!

அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் பெருங்காயம் அதாவது பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய, அந்தப் பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை பயக்கிறது.

பெருங்காயப் பொடி தயாரிக்கும் முறை!

நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரும் பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,பின்னர் அதனை ஒரு வாணலியில் சூடுபடுத்தி, பின்னர் அதனை நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்த பின்னர் பெருங்காய வாசனை மற்றும் மருத்துவ குணங்கள் நீண்ட நாள் நீடிக்க,பொடியை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து
நீண்ட நாள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெருங்காயத்தின் பயன்கள்!

1. பெருங்காயத்தில் அதிக அளவிலான புரதச்சத்து உள்ளது. எனவே நம் உணவில் தினசரி சமையலில் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம்,நம் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கும்.

2. ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சு விடமுடியாமல் தவிப்பவர்கள் பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு,அதிலிருந்து வரும் புகையை சிறிது நேரம் சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சினை விடுபடும்.

3. தினமும் நம் உணவுடன் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து வந்தால் வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை அறவே நீக்கும். இதுமட்டுமின்றி குடற்புழுக்களை அழிக்கும் சக்தியும் இந்தப் பெருங்காயதிற்கு உள்ளது.

4. நொடிப்பொழுதில் பல் வலியை நீக்க,பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தாள் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்.

5. உடலில் வாதம் ,கபம் போன்றவற்றை சமநிலைப்படுத்த இந்த பெருங்காய தூளானது அருமருந்தாக பயன்படுகிறது.இதனை சரியான அளவு பயன்படுத்த வேண்டும்.அளவுக்கு மீறினால் பித்தத்தை அதிகமாக்கிவிடும்.

6. தினமும் பெருங்காயத் தூளை உணவில் சேர்த்தால்,நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் தலைவலி பிரச்சனைக்கு நல்ல மருந்தாக பயன்படுகின்றது.

7. பிரசவமான தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அதிகமான உதிரப்போக்கு இருக்கும்.அந்த நேரத்தில் அவர்களுக்கு வானில் பெருங்காயத்தை வறுத்து,அத்துடன் சிறிது கருப்பட்டி இஞ்சி சாறு மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிட கொடுத்தால் அதிகப்படியான உதிரப் போக்கு குறையும்.

No comments:

Post a Comment