JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
யோகா மற்றும் இயற்கை மருததுவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டில் பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஆகஸ்ட் 28 மற்றும் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி மற்றும் 15ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பை செப்டம்பர் 12ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவங்களை தபால் மற்றும் கூரிய சேவை மூலம் பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செப்டம்பர் 15ம் தேதி வரை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment