Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 26, 2020

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம். 

12ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல்), தொழில் பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல்) மற்றும் 2 ஆண்டுகள் உரிய தொழில் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தற்போது நேரடியாக கல்லுாரிக்கு வந்து 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment