JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 15, 2020

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு.. ஆசிரியைக்கு 3 மாதகால ஊதியம் பிடித்தம்

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பீட்டில் தவறான மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் 3 மாத கால ஊதியத்தை நிறுத்தி தர்மபுரி மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஜெயஸ்ரீ என்கிற மாணவிக்கு ஆங்கில ஆசிரியை வளர்மதி என்பவர் 82 மதிப்பெண்ணுக்கு பதில் 32 மதிப்பெண் வழங்கியதால் அவரின் தவறுக்கு தண்டனை அளிக்கும் விதமாக ஆசிரியருக்கு 3 மாத ஊதியம் நிறுத்தப்பட்டது.

வழக்கமாக விடைத்தாள் திருத்தலின்போது தவறு இழைக்கும் ஆசிரியர்களை அடுத்த முறை மதிப்பீட்டிற்கு அழைக்கமாட்டார்கள் அல்லது வேறு நடவடிக்கை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது முதன்முறையாக 3 மாத கால ஊதியத்தை நிறுத்தியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் பொறுப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment