Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 27, 2020

கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த கல்விக் குழு உட்பட 5 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு அறிவிப்பு.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் முடிவுற்று , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பதவியேற்றுள்ளன . மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக் கொண்டுள்ளதன் காரணமாக , அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் , அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் , கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து பார்வையில் காணும் அரசாணையில் தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த தமிழக அரசு அறிவித்த 5 குழுக்கள் :

1. நியமனக்குழு

2.வளர்ச்சி குழு

3.வேளாண்மை

4. நீர்வள மேலாண்மை குழு

5. பணிகள் குழு

கல்விக் குழு 

ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.


இக்குழுவின் தலைவராக கீழ்க்காணும் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவரை கிராம ஊராட்சி மன்றம் தேர்வு செய்ய வேண்டும். 


உறுப்பினர்கள் 

1. பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி 

2. சுய உதவிக் குழு பிரதிநிதி 

3. அரசு சாரா அமைப்பைச் சார்ந்த பிரதிநிதி 

4. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை 

5. சத்துணவு அமைப்பாளர்

முக்கியமான பணிகள் 

* ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய செய்தல்.

* அனைவருக்கும் கல்வி , முறை சாரா கல்வி , நூலக மேம்பாடு , எழுத்தறிவு மற்றும் கிராமப்புற மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கான உத்திகளை வகுத்தல்.

No comments:

Post a Comment