THAMIZHKADAL TODAY NEWS

சி.பி.எஸ்.சி., 12-ம் வகுப்பு தேர்வு எப்போது?

சி.பி.எஸ்.சி., 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் அதன்பிறகு அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் சி.பி.எஸ்.சி., மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சி.பி.எஸ்.சி., பொதுத் தேர்வுகள் நடைபெறும். இம்முறை பிப்ரவரி 15 தொடங்கி மார்ச் 31ல் முடிவடையும் வகையில் அட்டவணை இருக்கலாம் என்கின்றனர். 

அதே போன்று பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள்களும் சி.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் படி, புதிய தேர்வு முறையில் மாதிரி வினா தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel