Search This Blog

Wednesday, November 11, 2020

குரல் வளம் தரும் ஆடாதோடை இலை

0 comments
ஆடாதோடையின் சிறப்பு நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். 

பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள்.

அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். 

ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை ஆடாதோடை குடிநீர் குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர். இந்த குடீநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்.

No comments:

Post a Comment