Search This Blog

Saturday, November 21, 2020

CBSE - 10, 12-ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

0 comments
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணையவழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பள்ளிகள் திறப்பை உறுதிசெய்ய முடியாத நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதேநேரம் 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரி வித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி கூறியதாவது: 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும். அதற்கான தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்வு நடைமுறைமாற்றங்கள் குறித்த திட்டமிடல்தற்போது நடைபெற்று வருகின்றன. அவை இறுதியானதும் அதன் விவரங்களை வெளியிடுவோம்.

தற்போதைய கரோனா சூழலை சிபிஎஸ்இ பள்ளிகளும், ஆசிரியர்களும் திறம்பட கையாண்டனர். மேலும், தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இணையவழியிலான கற்பித்தலில் பல்வேறுபுதிய யுக்திகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர். அதன்மூலம் மாணவர்கள் கற்றல் பணி பாதிக்காதபடி கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு நடைமுறைமாற்றங்கள் குறித்த திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது. அவை இறுதியானதும் அதன் விவரங்கள் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment